டைரக்டர் ஸ்ரீதர் மட்டும் அவரது திருமணம் இந்த பிரம்ம முகூர்த்தத்தில் நடைபெற்றதாக ஒரு பேட்டியில் கூறியதைப் படித்ததாக நினைவு.
19 – 2 – 78 -ல் திருமணம் நடந்து ஓராண்டில் மூன்று முறை ” அபார்ஷன் ” ஆனது. உடனே என் மாமனார் என்னையும் உடன் வைத்துக்கொண்டு தன்னுடைய ஜோதிட நண்பரரிடம் எங்கள் இருவரது ஜாதகங்களையும் கொடுத்து பலனும் புத்திரபாக்யம் குறித்தும் கூறும்படிக் கேட்டார்.
ஜோதிடரோ அருமையாக விளக்க ஆரம்பித்து விட்டார்! ,
என்னுடையது ரிஷப லக்னம்., கன்னி ராசி., ரிஷப லக்னத்திற்காகட்டும் கன்னி ராசிக்காகட்டூம் சொற்ப புத்திரமே – அதுவும் இதற்கு மூன்றுமுறை கலைந்துவிட்டதால் இனி சந்தேகமே.
அப்படியே உண்டாயினும் கன்னி ராசிக்கு ஆண் வாரிசு அற்பமே மீறி ஆண் வாரிசு உண்டாயினும் குலக் கேடே! என்று தெளிவாக. எடுத்துரைத்து- என் வயிற்றில் புளியைக் கரைத்து ஜோதிடரை வெறுக்க. முதன் முதலாக வித்திட்டார்.
மேலும் என் கணவர் துலா ராசியென்பதால் இருதார யோகமுண்டென்றும் விளக்க பல புத்தகங்களை சாட்சியாக வேறு காட்டினார்.
19 – வயதில் பிள்ளை வரம் வேண்டி எங்கள் குலதெய்வமான ” தலைமலை நல்லேந்திரனை ” தரிசித்து பிள்ளை வரம் பெற பௌத்திரம் என்ற ஊரில் இறங்கி அடிவாரம ( சாலை வசதியோ காபா டீ போன்ற இன்னபிற வசதிகள் எதுவும் கிடையாது , புரட்டாசி மாத 5 – சனிக்கிழமைகள் மட்டுமே பக்தர்கள் வருகையுமிருக்கும் கரடுமுரடான மலைத்தடத்தில் பக்தர்கள் பந்தமேந்தி மலையேறறி வெயிலுக்குமுன திரும்புவதுமுண்டு ,
நகரத்துவாசியான நான் மலையேற திணறித்தவித்தோம்
மலையிலுள்ள குளத்தில் நீராடிய பின் தலைமலை நல்லேந்திர சுவாமியை தரிசித்து மனமுருகி கடவுளே ” அந்த ஜோதிடனின் வாக்கைப் பொய்யாக்கி எனக்கு ஒன்றுக்கு இரண்டாய் ஆண் மக்களைத் தந்து அவர்களாள் என் குலம் தழைக்கச் செய்யப்பா ! ” – என்று வேண்டினேன் ,
பின்னர் எங்களைப் போன்று வந்தவர்களிள் பலர் அங்கேயே சமைத்து பூஜை செய்து சாப்பிட்டனர் . அப்படி சாப்பிட்ட குடும்பமொன்று எங்களைக் கண்டு மனமிறங்கி எங்கள் பசியாற்றினர்- அன்றே அன்னதானத்தின் மகிமையுணர்ந்தோம்
பின்னர் மலையிறங்கும் போது பௌத்திரம் வழியைவிட எருமப்பட்டி வழி 2 – மைல் குறைவு எனக்கூறி அந்த ழியேயிறங்கி நாங்கள் அப்போது வசித்த துறையூரைச் சென்றடைநதோம்,
ஜோதிடனின் வாக்கை பொய்யாக்க. ஆன்மீக வழியில் மட்டுமல்ல தார்மீக ரீதியாக மருத்துத்தையும் நநநாடினோம்
துறையூரிலிருநது ஸ்ரீரங்கத்திலிருந்த Dr,பங்கஜவள்ளியெனும் மகப்பேறு மருத்துரைக் கலந்தாலோசித்து மறையான சிகிச்சையும் மேற்க் கொண்டோம்,
அனேகமாக 19 – வயதில் பிள்ளைவேண்டி Pre-treatment எடுப்பது நீயாகத்தானிருப்பாய் எ கேலி செய்து டாக்டர் என்றாலே மிரண்ட என்னை இன்முகத்துடன் பேசி சிகிச்சையளித்தார்,
13 -7 – 80 – ல் கணவரின் பணி நிமித்தமாக ஆத்தூர் வந்ததால் பிரசவம் தாய்வீடான சேலத்தில் K,N Rav hospitalil Dr, பத்மா ராவ் அவர்களிடம் நடைபெற்றது,
என் தவப்புதலவன் பிரசவத்திதின் போதும் அறுவை சிகச்சை செய்து எடுத்த குழந்தையழவில்லை என்றதும் பதறினாலும் அழுகுரல் கேட்டு தேறினேன். ஆனால் தோப்புள் கொடி வழியே இரத்தக்கசிவான. உடன் ஜோசியம் பலித்து பிறந்த ஆண் குழந்தை இறந்நுவிடுமோ என்றஞ்சினேன்
உடனே தலைமலையானே என் பிள்ளையை மீட்டுக்கொடு – குழந்தையோடு வந்து மும்முடி காணிக்கை செலுத்துகிறேன்.- பிள்ளையைத் தராவிட்டால் பிள்ளையோடு என்னையும் எடுத்துக்கொள் என்றழுதேன்
பிள்ளையில்லையென்பது பலித்தால் அவருக்கு மறுமணமும்முண்டுதானே ? – இந்த பயமும் ஆட்டிப்படைத்தது
அந்த ஜோதிடரால் நான் பாதிக்கப் பட்டது போல் மற்றர்கள் ஜோதிடர்களில் சிலரின் தவறால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு நாம் தரும் பலம் எத்தகை சக்திவாய்ந்தது என்றுணர்ந்த நான் ஜோதிடக்கடலில் மூழ்கும் வழி தெரியாமல் தவித்தேன்.
இன்றுவரை ஏகபத்தினி விரதனாக வாழும் கணவர்
இரண்டு ஆண் வாரிசு மட்டுமே – பெண்ணில்லை –இது எவ்வளவு பெரிய குறை தெரியுமா ?
தற்போது என்னை போன்று கலங்கி நிற்போருக்கு 20 -ஆண்டுகளாக ( ஜோதிடத்தை ஓரளவு கற்றுக்கொண்டு ) என்னால் முடிந்தளவுதவுகின்றேன்.
“தெய்வத்தால் ஆகாதெனினும் மூயற்சி மெய் வருத்தக் கூலிதரும் ” .்
hema gopi says
Excellent post Athai
S.M.K.S says
சூப்பர் அம்மா…