யாகாவாராயினும் நாகாக்க. காவாக்கா சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
இந்தக் குறள் மானிடராய்ப் பிறந்த. அணைவருமே கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
நா பிறழாமை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு அவசியம் மற்றவர் / கேட்பவர் மனம் புண்படாமல் பேசுவதாகும். அதுவன்றி மனம்போனபோக்கில் பேசுவதென்பது – கை நிறைய. பழங்களை வைத்துள்ளவன் அதைவிடுத்து காயை சசாப்பிக் கொடுப்பதற்கொப்பாகும்.
இல்லை – இதுதான் என் இயல்பு என்போரை நீங்கள் மற்றவர் மனம் வேதனைப்படும்படி பேசுவது – அவர்கள் மனதில் தீக்காயத்தினால் ஏற்பட்ட. வடுவைப்போல. மனதைவிட்டு நீங்காது ரணப் படுத்திக் கொண்டிருக்கும்.”
இப்படி நீங்கள் மற்றவர் நிலையுணர்ந்து இன்முகததுடன் பேசி அவர்ககளுக்குச் செய்யும் சாததரண உதவிகூட அவர்களுக்கு இந்த. ஞாலத்தைவிடப் பெரிதாத் தோன்றும்.
இப்படிப் பெற்ற. நட்பானது நமக்குத் துன்பம் வரும்போது நாம் துண்டுவிடாமல் தோள் கொடுக்கவல்லது,
அதுவும் எப்படி?
உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
நாவடக்கமென்பது ஒருவர் சொல்லக்கேட்டவுடனேயே அல்லது ஓரிரு நாளிலோ கைகூடி வருவதன்று. சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிமும் நாப் பழக்கம்
என்பது போல் மெதுவாகத்தான் கைகூடி ரும். ஆனாலும் அதனால் பெறும் பயன் ” சிறு துளி பெரு வெள்ளம் ” என்பது போல் கிட்டும் மகிழ்ச்சி மட்டற்றதாய் நிலைத்ததாய் திகழும்.
அது மட்டுமின்றி
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் மாலைகள் விழவேண்டும்.
ஒரு மாற்றுக் குறையாத மன்னன் இவனென்று போற்றிப் புகழ. வேண்டும்.
என்று ஒவ்வொரு தாயும் தன் பிள்ளை குறித்து காணும் கனவும் நனவாகும்.
Leave a Reply