சதீஷ்கர் மாநிலத்தின் தலைநகரான. ராய்பூரிலுள்ள. மகனின் வீட்டில் இரண்டு மாதம் தங்கியிருக்கும் வேளையில்
இங்குள்ள. மக்களது பக்தி பிரமிக்க. வைக்கின்றது.
விநாயக. சதுர்த்தி- நவராத்திரி – தீபாவளி போன்ற. பண்டிகைகளை இவர்கள் கொண்டாடும் விதம் கேட்டு மலைத்தேன்.
தற்போது சைத்ர மாதத்தில் வசந்த. ருதுவில் ” வசந்த. நவராத்திரி ” கொ
ண்டாடுகின்றனர். இதுசமயம் பெண்கள் ஒன்பது நாட்களும் காலில் செருப்பு அணியாமல் பகல் முழுதும் விரதமிருக்கின்றனர். அதிலும் குழந்தைகளுக்கென. தனியானதொரு சிறப்பு வழிபாடும் அடங்கியுள்ளது.
ராமநவமியையொட்டி வசந்த. நவராத்திரி கொண்டாடியதைத்தொடர்ந்து இவர்கள் கொண்டாடும் அனும. ஜெயந்தி இருக்கின்றதே அப்பப்பா! – சொல்ல. வார்தைகளேயில்லை.
இங்கு தெருவுக்குத் தெரு மூலைக்கு மூலை ஆஞ்சனேரும் சாய் பாபாவும் கோவில் கொண்டுள்ளனர்
ராமநவமி முடிந்த. ஏழாம்நாள் அல்லது சித்திரை மாத. சித்திரை நட்சத்திர. தினமாகக் கூட. இருக்கலாம் . ஊரிலுள்ள. அத்தனை ஆஞ்சனேயர் கோவில்களிலும் சிறப்பு பூஜை ஸ்பெஷல் மோர் மதியஉணவு ( அவர்களது ஸ்டைலில் சப்பாத்தி சப்ஜியுடன்) மாலை பாட்டுக் கச்சேரி நாடகம் என. அமர்க்களப் படுத்துகின்றனர்.
பக்தர்கள் இந்தவூர் வழக்கப் படி மட்டையோடு தேங்காய்
மாலை ஊதுபத்தி கொடுத்தால் அதை அப்படியே பூசாரி வைத்துக் கொண்டு பூ மற்றும் பிரசாதம் தருகின்றனர். தினசரி பிரசாதமாகதேங்காய் துண்டுகளுடன் வறுத்த கொண்டைகடலை இனிப்புருண்டைகளை கலந்து தருகின்றனர்.
அனுமஜெயந்தியன்று கோவிலுக்கு வரும் பக்தர்களனைவரும் கையில் அவரவர் வசதிக்கேற்ப. லட்டுகளோடு வந்து வழிபடுகின்றனர். அந்த. லட்டுகளில் சிலவற்றை எடுத்துதிர்த்து வறுத்த. கொண்டைகடலையோடு கலந்து பிரசாதமாத் தருகின்றனர்.
இங்கு தெருவோர கோவில்களில் நடத்தப்படும் நாடகங்கள் தெருக்கூத்தின் சிறப்பை பறைசாற்றுகின்றன.
நாடகம் என்றவுடன் நம்மூர்போல. துனுக்குத்தோரணமும் இரட்டை அர்த்தவசனமுமாகத்தானிருக்குமென நினைத்து பார்க்கச் சென்றால் எந்த வித வசதியுமில்லாத தெருமுனையில் இவர்களது அர்பணிப்பு பிரமிக்க. வைத்தது. முறையான. பயிற்சி பெற்றவர்களால் கூட இவ்வளவு நேர்த்தியாக. ஆட. முடியுமாவென்பது சந்தேகமே !
திரும்பியபக்கமெல்லாம் புராணக்கதைகள் சிங்கத்தின் மீதேறி வரும் பெண்தெய்வங்கள் எட்டுக்கை நாலுதலையுடன் கையயில் வேலைப் பிடித்துக் கொண்டு ஆடுமாட்டம் மெய்சிலிர்க்க. வைத்தது.
பாட்டுக் கச்சேரிகளை பாஷை புரியாததால் ரசிக்கமுடியவில்லை. இங்கும் சில மோசமானவை இடம்பெற்றிருக்கலாம்.
நம்மூரில் கோவில்களிலுள்ள மண்டபங்களில் இதுபோல் புராண நாடகங்கள் நடத்தினால் தெருக்கூத்தையும் தெருக்கூத்து கலைஞர்களையும் வாழவைத்த. புண்யம் கிட்டும்.
ஜெய் ஆஞ்சனேயா !
Leave a Reply