அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை. அவள் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை – மண்ணில் மனிதரில்லை.
தாயிற்ச் சிறந்த கோவிலுமில்லை – தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. அன்னை தந்தையே அன்பின் எல்லை.
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை
தாயில்லாமல் நானில்லை – தானே எவரும் பிறந்ததில்லை. எனக்கொரு தாய் இருக்கின்றாள்.
நானாக நானில்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
அம்மா என்ழைக்காத உயிரில்லையே
இப்படி பல திரைப்ப பாடல்கள் தாயின் பெருமையைப் பறைசாற்றினாலும்- இந்த தாய் உறவு எல்லோருக்குமே சிறப்பாக அமைந்துவிடுவதில்லை.
அதுவும் பெண்கள் வேளைக்குப் போக ஆரம்பித்த காலகட்டத்திற்குப்பின் பிறந்த பல குழந்தைகள் தாய்ப்பாலின் சுவை அறியாமலே வளர்ந்தன.
இன்றைக்கு தாய்ப் குறித்த விழிப்புணர்வு இளம் தாய்மார்களுக்கு ஏற்பட்டுள்ளது பாராட்டுக்குறியது.
பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ள தாய்மை ஒருவனுக்குச் சிறப்பாக அமையவில்லையெனில் – அது அவனது முன்வினைப் பயனே என்று ” அர்த்தமுள்ள இந்து மதம் ” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தாயின் நடத்தை பிள்ளைகளிடம் பிரதிபலிக்குமென்பதை
” நூலைப் போல சேலை
தாயைப் போல பபிள்ளை “
என்பது பழமொழி.
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே – பின்
நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே
இப்படி தாயை – தாய்மையை எத்தனை விதமாகப் புகழ்ந்தாலும் இந்த தாய் உறவு எல்லோருக்கும் சிறப்பாக அமையாததிற்கு ஆய்வு செய்ய வேண்டியது
4 – ம் பாவம்
4 -மிடத்ததிபதி
பகலில் பிறந்தோர்க்குச் சந்திரனின் நிலை
இரவில் பிறந்தோர்க்குச் சுக்கிரனின் நிலை
4 – மிடத்தை பார்க்கும் 4 -மிடத்துடன் இணையும் கிரஹங்கள்
என பல கோணங்களில் ஆய்வு செய்திடல் வேண்டும்
ஆனால் இன்றைய இளைய சமுதாயம் தன்னைப் பற்றி கவலைப் படுமளவுக்கு கூட தாயைப் பற்றி நினைக்க நேரமின்றி பணத்தின் பின்னே ஒடுவது வருத்தத்திற்குறியது.
மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு கிளை பாரமா?
கிளைக்கு காய் பாரமா?
பெற்றெடுத்த குழந்நைத் தாய்க்கு பாரமா? என்து போய்
உறவுககைக் கூட பாரமாகக் கருதும் நிலை வளர வளர. முதியோரில்லங்களும் வளருகின்றன.
இந் நானகாமிடத்தைச் சற்று அலசுவோமா ?
Leave a Reply