அஃகம் பெரிதா மளவில் சுகம்பெருகும்
வெஃகுவார் மன்னரரிறை மேல்
ஜெய வருடந் தன்னிலே செய்புனங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ் விளையும் – நயமுடனே
உலகின் பல. பாகங்களிலும் வசிக்கும் தமிழர்கள் அணைருக்கும்
இனிய. தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
சித்திரையில் வரும் வெப்பத்தை எதிர்கொள்ள. வருஷப் பிறப்பன்று சாப்பிடும் இனிப்பு புளிப்பு காரம் கசப்பு துவர்ப்பு என. மாங்கனியோடு செய்யும் சிறப்பு பதார்த்தம். வெயிலின் தாக்கத்தை உடல் எதிர் கொள்ள கண்டிப்பாக. பழவகைகளை சாப்பிட. வேண்டும் - என்றுணர்த்தவே வருஷ பிறப்பன்று காலை எழும்போதே ” கனி தரிசனம் ”
சித்திரையில் வரும் பௌர்ணமி அன்று ஆற்றோரங்கள் மட்டுமல்லாது அடுக்குமாடி குடியிருப்பிலுள்ளோரும் கூட. மொட்டைமாடி நிலவொளியில் சித்தாரன்னங்களோடு சித்ராபௌர்ணமியைக் கொண்டாடி நமது உடல் வெயில் காலத்தில் அறுசுவையையும் ஏற்றுக்கொள்ள. பக்குவப் படுத்தினர்.
அது மட்டுமல்லாது வெய்யிலின் தாக்கத்தால் உடல்உபாதைகள் ஏற்படாமலிருக்க. ஆங்காங்கே அம்மனின் பிரசாதமாக. கூலும் மோரும் பானகமும. வழங்கப் பட்டு ” வருமுன் காப்போம் ” – என மக்கள் நலன் பேணப் பட்டது.
சித்திரை வைகாசியில் வரும் 22 – நாள் அக்னி நடட்சத்திரம் காலங்களில் சுபகாரியங்களைத் தவவிர்த்தனர்
சித்திரையில் நிகழும் பிரசவத்தினால் தாய்க்கும் குழந்தைக்கும் ஏற்படும் இன்னல்களைத் தவிர்க்க. தம்பதியினர் குறைந்தபட்சம் ஆடி மாதம் 18 – ம் தேதி வரையிலேனும் பிரித்து வைக்கப் பட்டனர்.
வசந்த. ருது காலமான. இம்மாதத்தில் ( சைத்ர மாதம் ) வட நாட்டில் வசந் நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடி ராமநவமியன்று ஒன்பது நாள் கொண்டாட்டத்தை நிறைவு செய்கின்றனர்.
சித்ராபௌணர்மியன்று சித்திரகுப்தனுக்கு செய்யப்டும் பூஜை சிறப்புமிக்கதாகும்.
சித்திரை மாத. அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி அட்சய. திருதியை திதியாகும். இன்றைக்கு பல்வேறு வியாபார. தந்திரங்களுகுப் பயன்படும் இத்திதியன்று உங்களால் முடிந்ததை உங்களிடமிருப்பதை தேவைப்படும் எளியோருக்கு மனநிறைவுடன் கொடுத்தாலே போதும். கண்டிப்பாக. அந் ஆண்டு முழுவதும் உங்கள் வீட்டில் மகிழ்வோடு செல்வம் தாண்டவமாடும்.
மேலும் முத்தாய்ப்பாக. இந்த சித்திரைக் கடைசியில் செவ்வாக் கிழமையும் சதுர்த்தி திதியும் இணைந்து வரும் நாளை தங்களது ஜோதிடர்களின் அறிவுரைப்படி தோஷநிவர்த்திக்குப் பயன்படுத்திக்கொள்ளவும்.
மலரும் இந்த. ஜய. வருடம் எல்லோரது வாழ்விலும் ஜயமுண்டாகட்டும்.
” இனிய. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்”
இப்புத்தாண்டு தினமான. இன்று ஜோதிடர்கள் / பஞ்சாங்கம் படிப்போர் மூலம் பஞ்சாங்கத்தின் பஞ்ச. அங்கங்களான. வாரம் திதி நட்சத்திரம் யோகம் கரணம் இவைட்டுமாவது கேட்டுப் பல
ன் பெறவும்.்
Leave a Reply