நம் முன்னோர்கள் சாமான்யர்கள் அல்ல. மரங்களின் தன்மையுணர்ந்தே அவைகளைத் தல விருட்சங்களாக. பராமரித்துவந்துள்ளனர்.
அறிவியல் பூர்வமாக அணைத்து தாவரங்களின் காற்று சுழற்சியும் தலைக்கு மேல் குடை பிடிப்பது போல் வட்டமாக சுற்றினாலும் அரசமரத்தின் காற்றானது மேலிருந்து கீழாக சைக்கிள் சக்கரம் சுற்றுவது போல் சுழன்றடிக்குமாம்.
இந்தக் காற்றானது தன்னடியே ஈர உடையுடன் வலம் வருவோரின் உடலுக்குள் ஊடுறுவி ( உடலுக்கு ஒன்பது வாசல் அல்லவா?) உடலின் உள்ளிருக்கும் நோய் தீர்க்க வல்லதாம்.
அதனாலேயே பெண்களை ” அரசனை நம்பி புருஷனைக் கை விட்டு விடாதே ‘ என்று கிண்டலடித்துள்னர்.
வேம்பு ஒரு சிறந்த கிருமிநாசினியாகும். அரசும் வேம்பும் சேர்ந்திருக்கிருக்குமிடம் மூன்று நதிகள் கூடுமீடமாகவும் இருந்துவிட்டால் த்தலம் வரம் கொடுக்குமிடமட்டுமல்ல, பிணிநீக்கும் தலமாகவும் விளங்கும்.
இவ்வளவு அறிந்தால் மக்கள் மருத்துவமனைக்கிணையாக குழுமிவிடமாட்டார்களா? .
குறிப்பிட்ட இடத்திலுள்ள நதியில் சூர்யோதய வேளையில் குழந்தையில்லா தம்பதியர் ( கணவன் மனைவி இருவரும்) தலை முழுவதும் நனையும் படியாகக் குளித்து அதே ஈர உடையுடன் அரசு வேம்பின் கீழுள்ள பிள்ளையாரை 108 – முறை ( மரத்தை சுற்ற) வலம் வர வேண்டும்.
இவ்வாறு செய்யும் நாளானது,
ஞாயிற்றுக் கிழமையும் சப்தமி திதியுமாகவோ
திங்கட் கிழமையும் அமாவாசையுமாகவோ
செவ்வாய்க் கிழமையும் சதுர்த்தி திதியுமாகவோ
இருக்க வேண்டும். இவ்வாறான நாளைத் தேர்ந்தெடுத்து செய்யும் போது அதன் பலன் மைல்டு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்பதற்கு நிகராகின்றது.
108 – சுற்று என்பது விடுபடாமலிருப்பதற்காக 109 – பூக்களை ( வாசனை மலர் எதுவானாலும் சரி) கொண்டு சென்று குளித்து வந்தவுடன் பிள்ளையாருக்கு ஒரு பூவை வைத்து வழிபட்டவுடன் சுற்றுக்கொரு பூ வீதம் நூற்றியெட்டு சுற்று சுற்றிவந்து வழிபடவும்.
இஇவ்வாறு செய்வது ” அசுவமேத யாகம் ‘ செய்வதற்கொப்பானது என்று ” ஜாதக அலங்காரம் ‘ சொல்கின்றது. ” லவ. குசா ‘ “இராமயணம் ‘ அறிந்தவர்கள் கண்டிப்பாக அசுவமேத யாகம் மற்றும் அதன் பலனையுமறிந்திருப்பீர்கள்.
பிள்ளையில்லா தம்பதிகள் மட்டுமல்ல தீரா நோயுள்ளவர்களும் தேறலாம் என்றுரைக்கின்றனர்.
ஜாதகப் பபலனறிய வருவோருக்குரைத்து பேரும் புகழும் மட்டுமன்றி புண்யத்தையும் தேடிக்கொள்வோம்.
நன்றி
அஸ்ட்ரோ
S.N.உஷா.
Leave a Reply