இதிருதியை திதி வளர்பிறை தேய்பிறை இரண்டிலும் அமாவாசை பௌர்ணமியை அடுத்து வரும். அப்படி வருவதில் வளர்பிறையில் வரும் திருதியைக்கு தனிச் சிறப்பு.
சித்திரையில் அட்சய திருதியை
வைகாசியில் ரம்பா திருதியை
ஆடியில் மதுஸ்ரவா திருதியை
ஆவணியில் ஹர்தாளிகா திருதியை
பங்குனியில் ஆந்தோள. திருதியை
என திருதியை வந்தாலும் சித்திரையில் வரும் திருதியை தனிச் சிறப்பு பெற பல புராண சம்பவங்கள் நடைபெற்ற நாளாக கூறப்படுகின்றது.
பரசுராமர் பிறந்த நாளாகவும் திரௌபதி வஸ்திராபரணம் பெற்ற நாளாகவும் மஹாலஷ்மியும் மஹாவிஷ்ணுவும் இணைந்தநாளாகவும் அன்னபூரணியிடம் பிச்சாண்டவர் பிச்சை பெற்ற நாளாகவும் தருமருக்கு அட்சயபாத்திரம் கிடைத்த. நாளாகவும் குசேலர் கண்ணனுக்கு அவல் கொடுத்த நாளாகவும் – சித்திரை மாத திருதியை தினம் கூறப் பட்டாலும்
இவையத்தனையும் இணைத்து ஜோதிடம் சொல்லும் கதையைப் பார்ப்போமா ?
பிரம்மனின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட. பிரம்மஹத்தி தோஷத்தின் காரணமாக பிரம்மனின் தலை திருவோடாகமாறி சிவனின் கையில் ஒட்டிக் கொண்டது அது அவரது கையை விட்டு விலக. வேண்டுமெனில் அந் திருவோடு நிறையுமளவுக்கு பிச்சை பெற வேண்டும் பெறும் பிச்சையை பாத்திரமே விழுங்கிவிடும் என்பதால் பிச்சை பெறும் வழியறியாத. சிவனுக்கு மஹாவிஷ்ணுவும் மஹாலஷ்மியும் மனமகிழ்ந்திருக்கும் வேளையில் பிச்சைபெறும்படி கூறப்பட. அவரும் அவ்வாறே பிச்சை பெற்று திருவோடு நிரம்பி அவரது கையைவிட்டு விலகியதாக கூறுவர். எது எப்படியாயினும் மூலாதாரம் அட்சய. திருதியையன்று பிறருக்கு அன்னமளிக்க வேண்டுமென்பதே பிரதானமாகும்.
நாம் அளிக்கும் அன்னம் விருந்தாக அமையவேண்டுமென்பதில்லை. சாதரண அவலாக இருந்தாலும் போதும். இறைவனை முழுதாக நம்பினால் அபயமளிப்பான். திரௌபதியேஅகூட இருகரங்களையும் ஏந்தி கண்ணா அபயம் தா என்றபின்னரே வஸ்திரம் தந்து அபயமளித்தாராம் கண்ண பரமாத்மா.
மானிடராய் பிறந்த. நாம் அன்றைய. தினம் ஒரு ஏழைக்கு வயிராற. உணவு ( ஸ்பெஷல் சாப்பாடு வேண்டாம் நாம் சாப்பிடும் சாதரண. உணவே போதும்) உடுக்க நல்ல உடையின்றி இருப்போருக்கு உடுத்த. ஒரு உடை – இவற்றில் ஏதேனுமொன்று – முடிந்தால் இரண்டுமே செய்து பாருங்களேன்!
ஒரு கிராம் தங்கம் வாங்கும் செலவில் பத்தில் ஒரு பங்கு கூட ஆகாது ஆனால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஆண்டு முழுதும் தாண்டவமாடும்
யாரரோ ஒரு நகை வியாபாரியின் வியாபார. உத்தி இன்று மக்களை அட்சயதிருதியை அன்று நகைகடைகளை முற்றுகையிட வைத்துள்ளது.
இந்தப் பதிவைப் படிக்கும் சிலராவது 2 – 5 – 2014 – வெள்ளிக் கிழமையன்று அன்னமோ வஸ்திரமோ ( உணவு அல்லது உடை – முடிந்தால் இரண்டும்) அளித்து வளமும் மகிழ்வும் அடையுங்கள்.
உங்களின் நண்பர்களுக்கும் தெரிவித்து பயனடைய. செய்யுங்கள்.
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து”
இந்த அட்சய திருதியை நகை வாங்குவதைத் தவிர்த்து மேலே கூறியவற்றை செய்து பாருங்கள்
அந்த ஒரு நாளில் வாங்க. எண்னிய. தங்கத்தின் அளவைவி பன்மடங்கு தங்கம் ஆண்டு முழுதும் வாங்கி மகிழ்வீர். இந்த ஆண்டு 18 -4 -2018 – அன்று வரவிருக்கும் “அட்சய திருதியை ‘ யை முன்னிட்டு மீண்டும் ஒரு நினைவூட்டல்.
Astro S.N.Usha
Leave a Reply