இராகு – கேது இருவரும் ஒரே நேர்க்கோட்டில் ( 180 – டிகிரி) இருப்பார்கள். நிழல் கிரகங்கள் போன்ற தகவல்கள் எல்லோரும் அறிந்ததே.
ஒருவரின் ஜாதகத்தில் இராகு 9 – மிடத்தில் இருந்தால் அவர் செய்யக்கூடிய எளிய பரிகார முறைகளாக சிலவற்றைக் கூறியுள்ளனர்.
இவர்கள் கழுத்தில் எப்பொழுதும் தங்கச்சங்கிலி ( அரை பவுனிலிருந்தாலும் போதுமானதே) அணிந்திருக்க வேண்டும்.
கோவிலுக்குச் சென்றால் கொடிமரத்திளருகே ஆண்கள் சாஸ்டாங்க நபஸ்காரமும், பெண்கள் மண்டியிட்டும் தலைமுடி தரையில் படும்படி விழுந்து வணங்க வேண்டும்.
கூட்டுக்குடும்பமாக வசித்தல் நலம். கூட்டுக் குடும்பமாக வசிக்க இயலாதவர்கள் தங்கள் வீட்டில் சமைக்கும் சாப்பாட்டை தினமும் – வேலையாட்கள் அல்லது கடையில் வேலை செய்பவர்களுடன் – பகிர்ந்து கொள்ளவும்.
இஇவற்றை கடைபிடித்து வந்தாலே இராகுவினால் ஏற்படும் தோஷங்கள் விலகிவிடும் என்று கிரகங்களுக்கான பரிகாரங்களாகக் கூறப்பட்டுள்ளது.
நீங்களும் கடைபிடித்துப் பலனடையுங்களேன்.
Leave a Reply