வரும் 18-4-18 – புதன் கிழமை அன்று காலை பூஜை அறையில் / சுவாமி படத்தின்முன், ஒரு சொம்பில் நிறைய நீர்விட்டு மாவிலை வைத்து அதன் மேல் முழு தேங்காயை வைத்து முடிந்தளவு அந்த தேங்காயை ‘அன்னபூரணியாக ‘ பாவித்து அலங்காரம் செய்யவும். வாழை இலையில் ஒரு டம்ளர் அரிசியைப் பரப்பி அதன் மேல் அலங்ரித்த அண்ணபூரணி கலசத்தை வைக்கவும். சிறு சிறு கிண்ணங்கள் ஐந்தை எடுத்துக்கொண்டு அவற்றில் முறையே பால், தயிர், பச்சரிசி, கல் உப்பு, சர்க்கரை வைத்து கலசத்தின் மேல் கிடைத்த வெள்ளைநிற மலர்களைப் போட்டு தங்களால் முடிந்த (தயிர் சாதம் பால் பாயசம் அவுல்) நைவேத்தியத்தைப் படைத்து வணங்கவும். கலசத்திற்கு வெள்ளைநிறம் பிரதானமாயுள்ள – புதன் கிழமை வருவதால் பச்சை வர்ணம் கலந்திருந்தால் தவறில்லை – ரவிக்கை / சேலை படைத்தும் வழிபாடு செய்யலாம். வெள்ளி நாணயம் வைத்தும் படைக்கலாம். இவற்றில் எது சாத்தியமோ அம்முறையில் தங்களில்லத்தில் வழிபாடு செய்து அன்றைய தினம் யாரேனும் ஒருவருக்கு உங்கள் வீட்டில் அமரவைத்து விருந்து படையுங்கள். அந்த ஆண்டு முழுவதும் அஷ்டலஷ்மிகளும் உங்களுடன் வாசம் செய்வார்கள்.
Leave a Reply