இன்று ” மூலம் ‘ நட்சத்திரத்தைப் பற்றி பார்ப்போம். என்னுடைய இதே பக்கத்தில் முன்பே மூலத்தைப் பற்றி எழுதியிருந்தாலும் சந்திரனின் கோர்வையில் மீண்டும் மூலம் வலம் வருகின்றது.
“” ஆண் மூலம் அரசாளும் – பெண் மூலம் நிர்மூலம் ”- இது எப்படி தெரியுமா? எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் – (அதை) படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்
என்ற கதைதான். இராசிகளில் ஆண் – பெண் இராசிகள் என பிரிப்பதில் உபய இராசிகளில் முதலில் வரும் “”மிதுனம் ” ஆண் இராசியாகும். இதற்குரிய மாதம் “ஆனி ”. இரண்டாவதாக வரும் “”கன்னி ” இராசி பெண் இராசியாகும். இதற்குரிய மாதம் “புரட்டாசி ‘ ஆகும்.
மற்ற இரு உபய இராசிகளும் குருவின் வீடாக அமைவதால் குறிப்பிடவில்லையென எண்ணுகிறேன். ஆக. மேலே குறிப்பிட்டபடி ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை (ஆனி மூலம் அரசாளும்) அறிவுத் திறமை ஆளுமைத் திறமை மிக்கதாகத் திகழும்.
இவர்களை IAS, I PS, – குரூப் -1. தேர்வுகளைத் தைரியமாக எழுதச் சொல்லி உற்சாகப் படுத்துங்கள்.
பெண் இராசியாகிய புரட்டாசி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் ( பின் மூலம் நிர்மூலம்) பிறந்தவர்களின் ஜாதகத்தை முழுமையாக அலசிய பின் பலனுரையுங்கள். நிச்சயம் நிர்மூலமல்ல – அதுகூட ஏன் நீர்மூலமாக இருக்கக்கூடாதென யோசிப்பேன் –
இவர்களை ஒரு செயலைத் துவங்கு மூன் சிந்தித்துத் தெளிவாக செயல்பட்டால் நிச்சயம் வெற்றி என்றுரையுங்கள். கூட்டுத் தொழிலெனில் கூட்டாளியின் ஜாதகத்தோடு ஒப்பிட்டு இணையுங்கள். பெரும்பாலும் இவர்கள் தன்னிடம் கண்ணீர் விட்டழும் நபர்களிடம் ஏமாந்துவிடுகின்றனர்.
இதே கருத்தை நான் முன்பு பதிவு செய்திருந்தபோது “”திருமலை ” என்பவர்
புலியூர் பாலுவின் மகனார்
இண் மூலமெனில் சூரியன் எனவே பகலில் மூல நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளையும்
பெண் மூலமெனில் சந்திரன் எனவே இரவில் பிறக்கும் மூல நட்சத்திர குழந்தைகளையும் குறிக்குமென குறிப்பிட்டுள்ளதாகக் கமெண்ட்ஸில் தெரிவித்திருந்தார்.
( அவருக்கும், புலியூர் பாலுவின் மகனாருக்கும் மனமார்ந்த நன்றிகள்) இக்கருத்தும் மறுப்பிற்குறியதல்லவே? . எனவே இரு முறையிலும் அவரவர் கணிதமுறைகளில் ஆய்வுசெய்வோம்.
இது தவிரவும் கேட்டையின் கடைசி நாழிகையும் மூலத்தின் முதலிரண்டு நாழிகையுமென மொத்தம் மூன்று நாழிகைக் காலமும் “அபுக்த மூலமெனப்படும் ‘
இதில் பிறந்த குழந்தையை எட்டு வருடம் தந்தை பார்க்கக் கூடாதென்று கூறி ( இருபதாண்டுகளுக்கு முன்னர் வரையிலுமே) சிசு கொலைக்கும் இன்றைய தொட்டில் குழந்தைகளுக்கும் சில ஜோதிடர்கள் காரணமாகிவிட்டனர் என்பது வேதனையான நிஜம்.
ஆனால் பழம் ஜோதிட நூல்களெல்லாம் மூல நட்சத்திரத்தையும் ஆயில்யத்தை பிரித்தது போல் 60 – கூறாக்கி பகலுக்கு 30 இரவுக்கு 30 – எனக் கொண்டு பலன் சொல்லல் வேண்டுமென்றும் இதிலும்
1 – 2 -6 – 8 – 9 – 18 – 23 – எனில் இந்த ( முப்பதில்) கூறில் பிறந்தால் யோசித்துச் சொல்லவும் என்கின்றன.
அது மட்டுமல்ல
தேய்பிறை திருதியை + செவ்வாய்க் கிழமை
தசமி + சனிக்கிழமை
வளர்பிறை சதுர்த்தசி + புதன் கிழமை கூடிவரும் நாளில் அதிகாலை அல்லது மாலை வேளை ஜனம் குறைந்தபட்சம் ஆடு மாடு நாய் பூனையையேனும் ஹானியாக்கும். என்றிருப்பதால் பலரும் மூலமாவென முனுமுனுக்கின்றனர்.
மருத்துவ வவசதிகளில்லா நாளில் கூறிய கருத்துக்களவை. மருத்துவம் மகோன்னத வளர்ச்சியுற்ற இந்நாளில் நிச்சயம் மூலமொரு மேன்மையான நட்சத்திரமே.
இவர்களால் ( ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி) மாமனாருக்கு உயிர்ச்சேதமில்லை. தலைமைப் பொறுப்பில் சாதனைகள் பல புரியும் வல்லமை கொண்ட மூல நட்சத்திரக்காரர்களே மூலையில் முடங்கிவிடாமல் முண்ணணிக்கு வாருங்கள்.
சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள் சாதித்துக் காட்டுங்கள்.
நன்றி
அஸ்ட்ரோ S.N. உஷா.
Leave a Reply