நான் சோழ மண்டலத்தைச் சேர்ந்த சேலம் மாநகரில் தமிழோடு கரம்கோர்த்து வளர்ந்த பூர்வீகம் ராசிபுரம் அருகிலுள்ள சிங்களாந்தபுரமெனும் கிராமமாகும்.
அன்னையும் அத்தையும் தமிழாசிரியைகளாதலால் தமிழ் மீது ததணியாத மோகம் கொண்டு வளர்ந்தேன். என் தந்தை வழி தாத்தா மிக பிரபலமான ஜோதிடர். ஜாதக பலன் சொல்வதில், கணிப்பதில் வல்லவர். ஆனால், அவர் என்னுடைய 10-வது வயதிலேயே இறந்து விட்டதால் அவருடைய வழிகாட்டுதல் எனக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், அவருடைய ஆசிர்வாதம் எனக்கு கிடைத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே.
என்னுடைய 37-வது வயதில், என் மூத்த பிள்ளை பள்ளிப் படிப்பை முடிக்கும் சமயத்தில் நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், ‘Diploma in Astrology’’ படித்தேன். பின்னர், தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகத்தில், முதல் பேட்ஜில் சேர்ந்து ஜோதிடத்தில் ‘B.A Astrology’ முடித்தேன். இதற்கு என் பிள்ளைகள் மிகவும் உதவினர். முதலில் என் குடும்ப ஜாதகத்தை ஆய்வு செய்து, துல்லியமாகப் பலனுரைக்க கற்றுக் கொண்டேன். பின்னர், மற்றவர்களுக்கும் பலனுரைக்கத் தொடங்கினேன்.
ஜோதிட கலையில் என்னை வழிநடத்த, சிறந்த குரு இல்லாமல் மிகவும் அவதிபட்ட காலம் அது. இதைப் புரிந்து கொண்ட இறைநிலையே, எனக்கு மிக சிறந்த குருவாக மறைந்த ‘வீர ராகவன் சாரை’ எனக்கு அறிமுகப்படுத்தியது. நிறைய கற்றேன்; என்னை மென்மேலும் மேம்படுத்திக் கொண்டேன். என்னைத் தெளிந்த நீரோடை போல என்னைத் தெளிவுப்படுத்திய முதல் குரு, மறைந்த “வீர ராகவன்” அவர்களே.
பின்னர், கும்பகோணம் ‘அருணாச்சலம் அய்யா’ அவர்கள், எனது அடுத்த குருவாக இருந்தார். இந்த ஆன்மிக பயணத்தில் ஜோதிடம் பற்றிய தெளிந்த அறிவு, வழிகாட்டுதல் எனப் பலவற்றை எனக்கு கற்றுக் கொடுத்தார். 10 ஆண்டு காலமாக ஈரோடு பள்ளிபாளையம் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்க கூட்டத்திற்கு அழைத்து சென்று பல ஜாம்பவான்களோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். என் ஆசானாக அவர் எனது ஜோதிட பயணத்தை சிறப்பித்துக் கொடுத்தார்.
ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தில் உள்ள ஜாம்பவான்கள் எனக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வல்லுநராக மாற பெரும் உதவி புரிந்தனர். _______ கூட்டத்தில், ‘ராகு – கேது’ குறித்து நான் உரையாற்றியபோது, மனம் மகிழ்ந்து ‘ஜோதிட கலைச்சுடர்’ என்ற பட்டமளித்தனர். இத்தகைய பேரறிவை கொடுத்த அனைத்து குருமார்களுக்கும் என்னுடைய நன்றிகள்.
இத்துறையை நான் தேர்ந்தெடுக்க என் சொந்த வாழ்வும் ஒரு காரணம். அனைவரது வாழ்க்கையைப் போலவே எனக்கும் நன்மையும் தீமையும் கலந்த வாழ்க்கைதான். இதன் காரணமாக இவற்றை எதிர்கொள்ள, ஏன், எப்படி, இதற்கான சூட்சமங்களை புரிந்து கொள்ள என்னைப் போல வாடும் மக்களின் வாழ்க்கையை சீர்ப்படுத்த என்னை நான் இந்த ஜோதிட கலையில் சமர்ப்பிக்கத் தொடங்கினேன்.
இக்கால சூழலில் சில ஜோதிட வல்லுநர்கள் ‘பரிகாரமே இல்லை’ என்றும் ‘பணம் செலவழித்து பரிகாரங்கள் செய்யுங்கள்’ என்றும் கூறி வருகின்றனர். இந்த சூழலிலிருந்து நான் தனித்திருக்க விரும்பினேன். உண்மையை ஆயுதமாக்கினேன். பிரச்னைக்கு தீர்வு, பிரச்னையை எதிர்கொள்ள மனோதைரியம், ஜாதகத்தில் உள்ளது உள்ளபடியாக நேர்மையாக சொல்லி, என்னை நாடி வந்தோரைப் பக்குவப்படுத்தி, தெளிவுப்படுத்தி அனுப்புவதே என் தலையாய பணியாக நினைக்கின்றேன். இந்தத் தனித்துவ அணுகுமுறையே இன்று வரை என்னை நேர்மையான வழியிலும், சிறந்த வழியிலும் கொண்டு செல்கிறது. நம்பிக்கையா ஜோதிட வல்லுநர் என்ற பெயரும் வாங்கி கொடுத்திருக்கிறது.
1998-ல் என் ஜோதிட பயணத்தைத் தொடங்கி, சுமார் 20 ஆண்டு காலம் அனுபவம் பெற்று என்னை தகுதிப்படுத்திக் கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே. இந்த அனுபவ காலமும் ஜாம்பவான்களின் வழிகாட்டுதலும் ஜோதிட அறிவும் என்னைப் பக்குவப்படுத்தி, சிறந்த ஜோதிட வல்லுநராக மாற்றி இருக்கிறது. அனைத்துக்கும் காரணமான எல்லா வல்ல இறைவனுக்கு எனது நன்றிகள்.
தொடர்பு கொள்ள
திருமதி ஆஸ்ட்ரோ எஸ்.என். உஷா
3/15, மாரியம்மன் கோயில் தெரு,
ராசிபுரம் தாலுக்கா
நாமக்கல் மாவட்டம் – 637412
முகநூல் முகவரி – https://www.facebook.com/BalaJothidam/